ஒரு குழந்தையின்
அழுகையின் குரல் பக்கம்1
்
அம்மா நீ என்னை வைத்தில சுமக்கும்போது என்னலாம் நினைச்சிருப்ப சீமையில பிறக்காத
சிங்க குட்டி பிறப்பானோ*
தங்கத்திலயே செஞ்ச பெண் குழந்தை பிறப்பாளோ...**
உன் வயசுக்கும் என் வயசுக்கும் பத்து வருடம் கூட தான்டலயே.**
பால் வாங்க பணம் இல்ல
உன் நெஞ்சிலயும்
ஒருகூட பால் இல்ல.**
பிஞ்சு வயசுல பிச்ச எடுக்க என்னை மடி சாச்சிய காட்டுரியே**..
பசி வயிறு என்ன கிள்ள என் அழுகையிலும்
உனக்கு சொல்ல**..
சுட்டரிக்கும் சூரியனும் என் உயிர
பாதி எடுக்க மீதி
உயிர பசி எடுக்க....**
என் அழுகையும்
உன் பிஞ்சி வயசுக்கும் தெரியலயே..**
பட்ட மரத்தில பூத்திருந்தா என் அழுகையும் புரிஞ்சிருக்கும்**...
இப்ப துலுத்த மரத்தில பூத்திவிட்டேன் என் பசியும் புரிஞ்சிடுமா...**
நான் போய் சேரபோறேன் சேந்த பிறகு அழுதிடுஅம்மா..**
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்த பட்ட மரத்தில பூத்திடவன் இல்ல என் வைத்தில உன்ன சுமந்திடுவன் ...**
நான் செத்த பிறகு ஊத்தும் பால கொஞ்சம் முந்திய ஊத்திருந்தா ...**
கூட கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்..**
சின்ன வயதில் பழுத்த உன்ன பிஞ்சி வயதில்
பிரிய போறன்..**
உன்ன தனியா விட்டுபோக எனக்கு கொஞ்சம்
கூட மனசு இல்ல ...**
செத்தாலும் உன் கூட தாயா நான் துணை இருப்பேன்..**
பாலு குடிக்கும் வயதில்
பால் குடிச்சி போகிறேன் தாயே...**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment