Thursday, 27 December 2012

1

என் முதல் காதல்
கல்யாண ஊர்வலத்தில் மணப்பெண் கை பிடித்து வருகிறாள் தங்கை என்கிற உறவோடு அவள்!
மண மேடையில் இரு இதயம் ஒன்று சேரும் முன்
என் இதயம் அவளிடம் சேர்ந்து கொண்டது..**
அவள் என்னை தான் பார்கிறாள் என்று சிறு ஏமாற்றம் ..**
இருந்தும் மீண்டும் பார்க்கிறேன் அவள் என்னை பார்பாளோ என்று தெரிந்தே ஏமாறியது இதயம்..**
மூன்றாவது முறையும் பார்க்க தூண்டியது என் இதயம் ..*
சிறு சிறு வேர்வை துளிகளோடு என் மீது பதட்டம் கொண்டேன் ..*
அவள் பார்வை என் மீது சட்டேன்று கடந்தது .*
என் உடலில் ஏதோ புதிதாய் பிறந்த உணர்வு முதல் முதலில் உணர்கிறேன்..**
அவளிடம் பேச்சை தொடங்க காரணம் தேடினேன் காரணம் கிடைத்தது.*
மெதுவாய் சில நடுக்கத்துடன் அவள் அருகில் கடந்தேன் அவள் அருகில் செல்ல செல்ல தயக்கம் நடுக்கம் எல்லாம் என்னை கடந்து சென்றது என் வேகம் குறைந்து கொண்டே இருந்தது
அவள் அருகில் சென்றதும்
அவள் முன் தயக்கத்துடன் நின்று இருந்தேன் .*
அவள் என்ன வேண்டும் என்று கேட்டதும் என் காதில் விழும் ஓசை காதல் மணி ஓசை மீண்டும் தயக்கத்தோடு
தண்ணீர் வேண்டும் என்று கேட்க
மௌனம் என்னை தடை விதித்தது.**
அவள் என்னை கடந்து சென்றாள் நான் வாய்ப்பை இழந்து மௌனம் கொண்டேன்..*
மறுநாள் காலை மாப்பிள்ளை விருந்து அவள் புதிய தம்பதிக்கு பரிமாறி விட்டு கடந்து என் அருகே பரிமாற வந்தாள் அவளிடம் ஒரு மாற்றம் நடந்ததுபோல் உணர்தேன்*
அவள் பரிமாறிய படியே என்னை பார்த்தாள் சிறிதாக ஒரு புன்னகைத்தாள் சட்டென்று பாய்ந்த காதல் மின்சாரம் ..**
காலை கடந்து மாலை பிறந்தது எங்களை வழி அனுப்ப தன் குடும்பத்தோடு கலந்து வந்தாள்
பெரியோர்கள் பேசி கடந்தனர் நான் அவளை பார்ததபடியே கடந்தேன் சிறிது நேரம் கழித்து என்னை பார்த்தாள் நான் அவளை பார்த்து புன்னகைத்தேன்
அவளும்  புன்னகைத்தாழ் .*
ஒரு காகிதத்தை சிறிதாக கிளித்து என் கைபேசி எண்களை எழுதி அவள் பார்க்கும்படி அவள் எதிரே சிரித்த படியே கண் சிமிட்டி எறிந்தேன் ரயில் வந்தது எங்கள் குடும்பத்துடன் ஏறி சென்றுஅமரந்தேன் அவள் அந்த காகிதத்தை எடுத்து கைகளில் அடக்கி கொண்டாள்
தொடரும்...

No comments:

Post a Comment