இளைஞர்களின் கனவு விதைகள்...**
மறைந்துப்போன
காலங்கள்
கலைந்துப்போன கனவுகள்..**
சில கனவுகள் இரவில்
விதைக்கப்ட்டன ..**
ஒவ்வொரு விதைகளும்
ஒவ்வொரு துளிர்க்கும்
கனவுகளாகிறது..**
கனவு விதைகள்
விதைத்துக்கொண்டே இருக்கிறோம்..**
சில கனவு விதைகள்
விதைப்பதர்க்கு முன்பே
அழிந்து விடுகின்றது..**
சிலர் கனவுகளை விதைத்து விட்டு தன்னையும்
விதைத்துக்
கொள்கிறார்கள்..**
்
ஒரு சில கனவுகள் விதைத்த உடனே துளிர்ந்துவிடுகிறது ..**
காய்ந்த நிலத்தில்
விதைத்துவிட்டோம் . **
முளைக்கும் வரை காத்துருக்க
காலங்கள் இல்லை..**
காலம் கடந்தால் என்ன! கனவுகள் முளைக்கட்டும்*
காய்ந்த நிலம் ஆனால் என்ன !
வேர்வை துளியில்
முளை முளைத்து செழிக்கட்டும்.**
புயல் அடித்தால் என்ன!
விதைத்துக்கொண்டே இருப்போம்..**
பூகம்பம் வந்தால் என்ன!
மலை மேல் விதைகளை விதைப்போம்..**
மழை பொழிந்து கனவை
அழித்தாள் என்ன!
பாலைவனத்தில் விதைக்க
கற்றுக்கொள்வோம்..**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment