Sunday, 30 December 2012

காதல் கதை

பள்ளியில் என் காதல் தொடங்கப்பட்டது இன்று பேருந்து நிலையத்தில் அவள் வரும் 28c பேருந்துக்காக நான் காத்திருக்கிறேன் ""
அஹா"" குலிங்கியபடி வருகிறது தூரத்தில் நான் எதிர் பார்த்த பேருந்து நான் ஏறினேன் அவள் முன் சீட்டில் அமர்ந்திருந்தாள்""
அவள் அருகே கண் இமை மூடாதபடியே அவளை அணு அணுவாய் சிறைபிடித்தேன்""
என்ன தயக்கமோ அவளுக்கு என்னை கண்டதும் அவள் கரு விழி திசை மாறியது "'
இருவரும் இறங்கும் இடம் அடைந்தோம்""அவள் அலங்கிரித்து நடந்த நடைக்கு ஈடுகட்ட
சிட்டெரும்பு நடை போட்டேன்""

அவள் நெஞ்சில் சாய்ந்து உறங்கியது பாடப் புத்தகம்""
எனக்கு மட்டும் காதல் பாட புத்தகம் கூட்டபட்டது""
இன்று வரை காதல் புத்தகத்தை அவளிடம் திறந்து காட்டவில்லை "'
இன்று பள்ளியின் கடைசிநாள்நான் மேசையிலும் அவள் முன் மேசையிலும் அமர்ந்திருக்க
என் கண்கள் அவளை வர்ணித்து கவி பாடியது""
என் காதல் புத்தகத்தில் காகிதம் கிளித்து கடிதம் எழுதினேன் "
என் ஒரு வருட உணர்வுகளை கடிதமாக உயிர் கொடுத்தேன்""
பள்ளி முடிவு மணி அடித்தது""
அவள் தோழிகளிடம் பிரியும் நேரத்தை நினைத்து அழுது
பிரிந்தாள்""
இதுவரை அவள் பெயரை மௌனத்தில் உச்சிரித்த நான்முதன் முறையாய் அவள் பெயரை செல்லி அழைத்தேன் (ரம்யா ) என்று ""
அவள் பார்வை என்னிடம் திரும்பியது ஏதோ தயக்கம் இருவரிடமும் என் இதயம் ரத்த ஓட்டம் வேகம் கொண்டது நரம்புகள் சிலிர்த்துபோனது கைகள் மறுத்துபோனது""
என் கடிதத்தை லேசாக உயர்த்தினேன் அவள்
என்ன ! என்று கேட்டதும்
கடிதம் மறைக்கப்பட்டது
பின் வருசையில் காதலும் மறைக்கப்பட்டது "
அவள் என்னை கடந்து சென்றாள் நான் வாய்ப்பை இழந்து நின்றேன்""
சொல்லபடாத காதல் சொல்லபடாமல் போனது"'
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment