Friday, 21 December 2012

காதல் கவிதை

புதிதாய் பிறந்த காதல் கவிதை.....

என் நெஞ்சு கூட்டில் காதல் இதயத்தை நுளைத்தவளே..

உன்னுள் நுளைய என் கற்பனையில் காதல் செய்கிறேன்...

உன்னை வார்தையில் வர்ணிக்க மௌனங்கள் தடுக்கிறது...

உன்னிடம் கவிதை சேர்க்க
காகிதம் உதவியும் எழுத்துக்கள் தவிர்கிறது..

நிலவை தலுவியது உன் அழகு..

பூக்களை காதல் செய்த வண்ணத்து பூச்சி இன்று உன்னிடம்  காதல் செய்வதால் பூக்கள் எல்லாம் வாடி உதிர்கிறது..

உன் அழகை ரசித்து ரசித்து கவிஞன் ஆனேன்!

வைரமுத்து கவிதைகள் உன்னை கடந்த காலத்தில்  வர்ணித்தது...

உன்னை நிகழ் காலத்தில் நான் வர்ணித்து வைரமுத்து தோற்றார் என்னிடம்...

என் கவிதைகளை நேசித்து விடாதே அர்த்தம் தெரிந்தால் உன்னை உன்னால்  என் அளவிர்க்கு நேசிக்க முடியாது...

மேகம் துளைத்த பிள்ளை ஓன்று என் எதிரே நடமாடும் ஓவியமானது..

உன் கால் தடம் பதிந்த இடங்களில் தாஜ்மாகல் கட்டுவேன் ...

கடந்த ஜென்மத்தில் யார் உன்னிடம் பெற்ற வரமோ..!

இந்த ஜென்மத்தில் உன் நிழலாய் பூத்திவிட்டன..

உன்னை பின் தொடர்வதில் உன் நிழலை முந்திவிட்டேன்...

உன் அழகில் தினம் தினம் உயிர் இழப்பு ஒருமுறை இறந்தால் மரணம் தினம் தினம் இறந்தால் ஜனனம் ..

உன்னிடம் நான் ஐனனமாகிறேன்..்

என்னை  இவ்வுலகில் தனிமையில் பூட்டி செல்லாதே...

நினைவுகளோடு பொறடிக்கொண்டுருக்க
என்னாள் முடியுமோ..

அடுத்த பிறவியில் என்னை காதலித்துவிடு இல்லையில் இந்த பிறவியில்  மட்டும் என்னை படைத்துவிடு..

ஆக்கம்---*பிரவீன்*
-----------------------------------

No comments:

Post a Comment