முதல் காதல்*
உன்னிடம் புதிதாய் ஒரு உலகம் பிறந்துவிடும்..**
காற்றின் முகவரி அறிவாய்
காக்கைகள் பேசும் மொழி
கவிதையாய் புரிந்துகொள்வாய்..*
உன் உடலில் துடிக்கும் இதயம் கூட உனக்காய் துடிக்க மறந்துவிடும்.**
யாரோ ஒருத்திக்கு துடிக்க ஆரம்பித்துவிடும்..*
உன் தாய் மொழி மறந்துபோவாய்..**
பூக்களின் முகவரி
தேடி போவாய்..**
உன் வீட்டு கண்ணாடியில் அவள் பிம்பம் காண்பாய்..**
அவள் நிழல் உன்னை பின் தொடர்வதை போல் உணர்ந்து கொள்வாய்..*
அவளிடம் மௌனம் கொள்வாய்..**
காற்றுகளிடம் பேசி கொண்டே இருப்பாய்..*
பேனாவின் அறிமுகம் காண்பாய்..**
கவிதையை நாடி செல்வாய்..**
தமிழ் மொழிகள் நண்பனாகும்..**
புத்தகத்தில் காகிதத்தை வேண்டும் என்றே இழந்துவிடுவாய்..**
உன் காதலிக்காய் கவிதை எழுத வார்தைகள் இருந்தும் வார்தைகளை தேடி சென்று உன் உணர்வுகளை காகித்தில் பூட்டிவிடுவாய்..**
நீ எந்த மழையில் நனைந்தாலும் காதல் மழைபோல் உணர்வாய்..**
உன் மீது காதல் மின்சாரம் தாக்கிய பொதேல்லாம் புதிதாய் பிறந்துவிடுவாய்**
அவள் அருகில் சென்ற பொதேல்லாம்
உன் உடலில் நிலநடுக்கம் இல்லாத போதிலும் காதல் நடுக்கம் உணர்வாய்..**
காதலித்துபார்..**
ஆக்கம்-பிரவீன்
Wednesday, 26 December 2012
முதல் வரும் காதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment