Tuesday, 25 December 2012

ஒரு பறவை

ஒரு பறவையின் வாழ்கை *

கருமேகம் சண்டையிட்டு
மேகங்கள் விடும்
கண்ணீர் துளியில்
ஏதோ ஒரு பறவை
கூடு களைக்கபடுகிறது .*

எங்கோ ஒரு பறவை தன்
காக்கைகுஞ்சிகளை
இழந்துவிட்டது..**

எங்கோ ஒரு குஞ்சிகள்
தாயை இழந்து
அனாதையானது..**

தன் காக்கைகுஞ்சிகள்
வாய்திறந்தது தாய்
செவிக்கு உணவு பசியை
தன் தாய் மொழியிள்
மொழிபெயர்த்தது..**

தன் உயிரை இழந்தாலும்
குஞ்சின் உயிரை
மீட்டுக்கொள்ள
தான் நனைந்தாலும்
குஞ்சிகள் பசி தீர்க்க
தன் உயிரையும் கணக்கிட
மறுத்து கொண்டது தாய்..**

எங்கோ அலைந்து
தன் அலகில்
உணவை எடுத்து
வருமாம் தாய்..**

அண்ணையின் பாசம்
எறும்பிற்கும் உண்டு.*

எவ்வண்ணம் தோன்றினாலும்
அவ்வண்ணமே முடியாத
உறவு தாயின் உறவு ..*

எவ்வண்ணம்
தேடினாலும்
எவ்வண்ணமே
கிடைக்காத
உறவுதாயின் உறவு ..*

எவ்வண்ணமே
எழுதிடாத
இவ்வண்ணமே எழுதுகிறேன்
தாய் கவிதை ..*

எவ்வண்ணம் தொடங்கினேன்
இவ்வண்ணம் வரை முடியாத
கவிதை
இந்த கவிதை..**
ஆக்கம்-பிரவீன

No comments:

Post a Comment