Saturday, 29 December 2012

நினைவுகள்

நாம் கண்ணாம்மூச்சி விளையாண்ட காலம் அனைவரும் தொலைத்துவிட்டோம்.**
நாம் நடை போட்ட தன்டவாளத்தில் நம் நினைவுகள் துருப்புடித்துகிடக்கிறது'".
மாங்காய் பறிக்க மாமரம் ஏறினோம் இன்று மாங்காய் பறிக்க ஆளின்றி மரம் வெறிச்சோடி நிற்கிறது""
கள்ளி செடியில் பெயர் பதித்தோம் இன்றும் அழியாமல் நம் நினைவுகளாய் பதிந்துருக்கிறது..""
கூட்டாச்சோறில் ருசி கண்டோம்""்
குச்சி ஜஸில் மாரி மாரி கடித்து தாகம் தனித்தோம்""
புழுதி மண்ணில் விளையாடினோம் ""
புட்டான் பிடிக்க கால்  நோக ஓடினோம்""
மாட்டு வண்டியில் ஒன்றாய் பயணம் செய்தோம் ""
ஓட்டை டயரில் போட்டி வைத்து வொற்றி கொண்டோம் ""
குட்டையில் குளித்து சுகம் கண்டோம் .""
இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை பிரிந்து காலத்தால் சிறைபிடித்து கிடக்கிறோம். ""
அன்று தொலைத்த காலங்கள் நினைவுகளின் பயணம் கொள்கிறது.."
நம் கண்ணீர் துளிகளை இழந்தாலும்,""
இழந்த காலம் மீண்டும் வருமா""
இன்று பஞ்சி மெத்தையில் படுத்தாலும் அன்று புழுதியில் படுத்த சுகம் வருமா""
இன்று காரில் சென்றாலும் அன்று மாட்டு வண்டியின் பயணம் செய்த சுகம் வருமா""
பழைய நண்பர்கள் பழைய நினைவுகள் இன்று நினைவுகளால் புதுப்பித்து கொள்கிறேன்­்.""
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment