Saturday, 22 December 2012

மழை

சூரியன் வெப்பம் தனிக்க கடலின்
மடியில் மறைகிறது ...**

கடல் தாய் கர்பம் தனித்து
மேகங்கள் எல்லாம்
ஒன்றுகூடி பிரசவம் பார்க்க..**

புயல் காற்றும்
அசைந்து ஆடியதும்
மரங்கள் இழைகள் பூக்கள்
தூவி வரவேற்று..**

சிறு சிறு மழை மழலை துளிகள்
மண் மீது துள்ளி
குதித்து ..**

அனைத்து மழலை
துளிகளும் ஆறுகளாய்
படையேடுத்து
தன் தாயின்
மடியிலே சென்றடைகிறது ..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment