Saturday, 2 February 2013

kadhal kavithai

வெண்மேக கூட்டங்களில்
இடையே உன் முகம் சாயலில்
உருமாற்றம் நடக்கிறது,

வண்ணம் இழந்த வானவில்
உடைந்து உன் நெற்றி புருவமாய்
ஒட்டிக்கொண்டு என்னை மை தீட்டியே மயக்கியது
,
காலை மாலை இரு
வேலையும் உன் நினைவுகளால்
என்னை தவனமுறையில்
கொள்கிறாய் ,

உன்னை கண்டபோதெல்லாம்
உனக்கும் சேர்த்தே என் இதயம்
ஒவ்வொரு நொடியும் இரட்டிப்பாகத்
துடிக்கிறது

தீயில் ஒலிந்த
காற்றை கொண்டு என்னை எரித்து செல்கிறாய்,

உன் கால் தடம் மண்ணில்
என்னை புதைத்துக்கொள்கிறாய்,
உன் அருகில் மௌனத்தின்
வரிகளைத் தூது அனுப்ப
தயக்கமே முதல் தபால்காரனானான்
ஆக்கம்-பிரவீன் —

No comments:

Post a Comment